(தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி நிறுவனம்)
(உயர்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு)
பி.எம்.பிர்லா கோளரங்கம் 1988ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி நிறுவப்பட்டது. மேலும் 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம்17ம் தேதி அறிவியல் தொழில்நுட்ப காட்சிக் கூடங்களைக் கொண்ட பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் நிறுவப்பட்டது. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் அறிவியல் தொழில்நுட்பக் கருத்துக்களை பொது மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் பரப்பி வருகிறது. இம்மையம், 12 தலைப்புகளில் அறிவியல் தொழில்நுட்ப காட்சிக்கூடங்களையும், ஒரு முப்பரிமாண திரையரங்கத்தையும், கோளத்தில் அறிவியல் திரையரங்கத்தையும் கொண்டுள்ளது. மேலும் அறிவியல் பற்றிய சந்தேகங்களை விளக்கி கூறுவதற்காக அறிவியல் அறிஞர்களை சந்தித்தல், மருத்துவ நிபுணர்களை சந்தித்தல், நடமாடும் அறிவியல் கண்காட்சி, அறிவியலை செயல்முறைகள் மூலமாக விளக்கிக் கூறுதல், இரவு வான்நோக்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் அறிவியலை எளிதாக புரிந்து கொள்ள வசதியாக அறிவியல் பூங்காக்களும், பரிணாம வளர்ச்சி பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இப்போது இரண்டு புதிய வியத்தகு வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.
பி.எம்.பிர்லா கோளரங்கத்தை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைப்பதற்காக புதிய உயர் தொழில்நுட்பம் கொண்ட இணைந்த எண்ணிலக்க கோளரங்கம் புத்தம் புதிய அரைக்கோள விதானத்துடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இங்கு புதிய தலைமுறை இயந்திர ஒளிப்பட கருவிகளுடன் நவீன எண்ணிலக்க திரைப்படக் கருவிகள் இணைந்து துல்லியமான வண்ணப் படங்களைத் திரையிட பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் கோளரங்கத்தில் விண்மீன்களின் நிகழ்நிலை தோற்ற நகர்வு, விண்வெளிப் பயணம், கோள்கள், நெபுலாக்கள், அண்டங்கள் மற்றும் பல்வேறு விதமான வானவியல் படங்களைத் திரையிட முடிகிறது.
மிகப் பிரம்மாண்டமாக இரவு வானின் விண்மீன்களைக் காட்டக்கூடிய இயந்திர ஒளிப்படக் கருவிகளுடன் இணைந்து விண்மீன் கூட்டங்களையும் விண்மீன் மண்டலங்களையும் அவற்றின் பெயர்கள் படங்கள் போன்றவற்றையும் எண்ணிலக்க ஒளிப்படக் கருவியின் மூலம் மிக அருமையாக துல்லியமாக அரைக்கோள வடிவ விதானத்தில் திரையிட முடிகிறது.
கோளரங்க மையத்தில் உள்ள ஒன்றிணைந்த கோளரங்க ஒளிப்படக்கருவி விண்மீன்களை நாம் வெறுங்கண்களால் வானத்தில் இரவு வானத்தில் காண்பது போன்று மிக அழகாக, துல்லியமாகத் திரையிடுகிறது.
கோளத்தில் அறிவியல் என்பது அமெரிக்க தேசிய கடலாய்வு மற்றும் வானியல் நிறுவனம் உருவாக்கிய கோள வடிவ திரையீடு கருவியாகும். அறிவியல் ஆய்வாளர்கள் இந்த திரையீடு கருவியை பூமியைப் பற்றி அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு கல்வி புகட்டும் கருவியாக உருவாக்கினர்.
பொதுவாக படங்களை நாம் சமதளத்தில் மட்டுமே திரையிடுவோம். ஆனால் இங்கோ அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு பெரிய கோளவடிவான திரையில் உயர் துல்லியம் மிக்க படங்களைதிரையிடுகின்றனர். அந்த கோள வடிவம் நமது பூமியைக் குறிப்பதாக அமைகிறது.
ஆச்சரியத்தை உண்டாக்கக் கூடிய உயர் தொழில்நுட்பமான காட்சிகளைக் கணிப்பொறிகள், ஒளிப்படக் கருவிகள் போன்றவற்றின் மூலம் 6 அடிவிட்டம் கொண்ட கோளத்தில் வானியல் படங்களை, கடலாய்வு படங்களை, பூமியைப் பற்றிய படக் காட்சிகளை நிகழ்நிலை படங்கள்அசைவு படங்கள் என்று திரையிட முடியும்.
இணைந்தஎண்ணிலக்கக்கோளரங்கம் மற்றும் கோளத்தில்அறிவியல் ஆகிய அறிவியல் வசதிகள்
மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அவர்களால், மாண்புமிகு உயர்கல்வித்துறைஅமைச்சர்அவர்கள்முன்னிலையில் 19.11.2019 அன்றுதிறந்துவைக்கப்பட்டன.
பி.எம். பிர்லா கோளரங்கம் மூலமாக வானவியல் பற்றி விளக்கி கூறப்படுகிறது. உதாரணமாக, சூரிய குடும்பம், விண்மீன்கள், எரி நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள் பற்றியும், மேலும் பல நிகழ்ச்சிகள் மூலமாக வானவியல் பற்றி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்கி கூறப்பட்டு வருகிறது. தற்போது, பி.எம். பிர்லா கோளரங்கம் ஒன்றிணைந்த எண்ணிலக்க கோளரங்க கருவி கொண்டு புதுப்பொலியுடன் செயல்பட்டு வருகிறது.
அனைத்து வார நாட்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் (361 வேலை நாட்கள்)
பொங்கல் திருநாள், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி
அறிவியல் காட்சிக்கூடம் நேரம் |
கோளரங்கம் காட்சிக்கூடம் நேரங்கள் |
|
---|---|---|
|
ஆங்கில மொழி காட்சி நேரங்கள் |
10.45
மணி |
01.15
மணி |
||
03.45
மணி |
||
தமிழ் மொழி காட்சி நேரங்கள் |
12.00
மணி |
|
02.30
மணி |
||
4.30
மணி |
நுழைவுச்சீட்டு கட்டண விவரம் | |
---|---|
அறிவியல் மையம் நுழைவு கட்டணம் | |
பெரியவர்கள் | ரூ. 30/- |
சிறியவர்கள் | ரூ. 15/- |
விருப்பக் கட்டணம் | |||
---|---|---|---|
கோளரங்கம் | முப்பரிமாண காட்சிக்கூடம் | கோளத்தில் அறிவியல் | |
பெரியவர்கள் | ரூ. 30/- | ரூ. 20/- | ரூ. 20/- |
சிறியவர்கள் | ரூ. 15/- | ரூ. 20/- | ரூ. 10/- |
தொகுப்பு கட்டணம் (அறிவியல் மையம், கோளரங்கம், முப்பரிமாண காட்சிக்கூடம் மற்றும் அறிவியல் பூங்கா) | ||
---|---|---|
தொகுப்பு கட்டணம் | கோளத்தில் அறிவியல் | |
பெரியவர்கள் | ரூ. 60/- | ரூ. 20/- |
சிறியவர்கள் | ரூ. 30/- | ரூ. 10/- |
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்
காந்தி மண்டபம் ரோடு,
சென்னை – 600 025.
தொலைபேசி : 044- 244 10025, 29520781
மின்னஞ்சல் : tnstc.science@gmail.com